WINDOWS 8 Operating System செயல்படும் விதம் குறித்த செய்திகள் Microsoft website இல், தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி
கம்ப்யூட்டர் ஒன்றின் RAM Memory நிர்வகிக்கப் படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக Memory Combining என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு Application program இயங்கும் போதும் RAM நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. Memory Combining செயல்பாடு, RAM Memory இடத்தைத் தொடர்ந்து Scan செய்து, ஒரே Application program ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து அத்தனை முறை Memory பயன் படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10MB முதல் 100 MB அளவில் Memory கிடைக்கும்.
WINDOWS System தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க RAM மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. WINDOWS 8 Operating System இல் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன. சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, WINDOWS 8 Operating System இல் அதிகம் பயன்படுத்தப்படாமல் இயங்கும் சில புரோகிராம்கள் தனித்தனியாக இயங்கும் போது அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் RAM Memory இனை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது எவற்றை நீக்குவது என்ற வழியை WINDOWS 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக் காட்டாக Software Application ஒன்றை திறக்கையில் Antivirus Software அதனைச் சோதனை செய்திட RAM மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது. இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக்கான RAM Memoryஇல் இடம் சேமிக்கப்பட்டு இடம் தேவைப்படும் மற்றைய புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் WINDOWS 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2GB RAM Memory இடம் கொண்ட கம்ப்யூட்டர்களில் RAM Memory தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது. ஏற்கனவே, WINDOWS 7 Operating System இயங்க குறைந்தது 404 MB RAM எடுத்துக் கொண்ட நிலையில், WINDOWS 8 Operating System 281 MB RAM மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே RAM Memory இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனியிருக்காது.

0 Comments