தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்! பொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள்,
பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே. ஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்! விட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்! இந்த உதாரணங்கள் வெகு சாதாரணமானவை. தங்களின் ஆர்வக்கோளாறால் எழுதவே கூசும் அளவுக்கு சைபர் உலகின் விஷப்பசிக்கு இரையாகும் மாணவிகள் ஏராளம்.
எம்.எம்.எஸ், வெப்காம் என நவீன தொழில்நுட்பத்தின் எதிர்மறை நிழலில் இளம்பெண்கள் தெரிந்தே செய்யும் அலட்சியத் தவறுகள் பல� பொழுதுபோக்குக்காகவோ, ஆர்வக்கோளாறினாலோ அப்படித் தங்களை அழகாக, அந்தரமாக புகைப்படங்கள் எடுத்து ரசிக்கும் பெண்கள், நாளடைவில் அப்ஸஷன் (Obsession) எனப்படும், குறிப்பிட்ட அந்த எண்ணத்திலிருந்து திரும்ப முடியாத பிடியில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவார்கள்.
நான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் புகைப்படங்கள்தானே என நினைத்து உங்கள் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலிலும் இறங்காதீர்கள். விபத்தைத் தவிர்க்க சாலையில் இருக்கும் மஞ்சள்கோட்டைப் போல, நமது வாழ்க்கையிலும் எதிர்படும் பல்வேறு மஞ்சள் கோடுகளை மதித்து நடக்க வேண்டும்� �இப்போது பல கல்லூரி மாணவிகளும் ஆசைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், தோழிகளுடனான ஜாலி தருணங்களுக்காகவும், காதலனிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் என, தங்கள் செல்போனில் தங்களைத் தாங்களே இப்படி அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது, பெருகி வருகிறது.
சட்டத்தின் பார்வையில் இப்படி கேமராவில் தவறான படங்களை எடுப்பதும் அதை பரப்புவதும், பகிர்ந்து கொள்வதும் குற்றமே. அப்படிப் பார்த்தால், இதில் முதல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பெண்களே. இணையதளத்தின் சமூக தளங்களில் உலவும் இளம் பெண்கள், அங்கு கூடியிருக்கும் கூட்டத்துக்கு இடையில் தனக்கென ஓர் இடம் பிடிப்பது, இணைய நண்பர்களை எப்போதும் தன் பிடியிலேயே வைத்திருக்கும் பிரயத்தனம், அதன் நீட்சியாக தங்களை வித்தியாச படமெடுத்துப் பதியும் முயற்சி என தங்கள் நிலையில் இருந்து எளிதில் கீழிறங்கத் தலைப்படுகிறார்கள்.
டிஜிட்டல் பதிவாக எடுக்கப்படும் புகைப்படங்களை, அவை ஸ்டோர் செய்யப்பட்ட உபகரணங்களில் இருந்து அழித்த பின்னரும் நவீன மென்பொருள்கள் உதவியால் மீட்கப் படவும் வழியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்த பெண், நிச்சயம் தன்னை அரைகுறையாக படமெடுக்க முயல மாட்டார். பிரச்னை என்றால், உடனடியாக காவல் துறையை அணுகி புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பெண்கள் தயங்கக்கூடாது. சைபர் க்ரைம் சிறப்புப் பிரிவு, நிபுணர்கள், விஷேச உபகரணங்கள் எல்லாம் காவல்துறையிடம் இருக்கின்றன.
அதை வைத்து குற்றவாளிகளை அடக்க முடியும். பாதிக்கப்படுபவர்கள் வாய் மூடி மௌனிப்பது விஷமிகளை தூண்டி விடுவதாக அமையும். “செல்போன் கேமரா, 3ஜி தொழில்நுட்பம், வெப்காம் போன்ற இந்த நவீன நுட்பங்கள் எல்லாம் இருமுனைக் கத்திபோல. கவனமாக கையாளவிட்டால் நமக்கு பெருத்த சேதத்தை தராமல் விடாது!

0 Comments