உங்கள் பேஸ்புக் கணக்கு பாதுகாப்பானhttps://www.facebook.com/ என்பதை உறுதி செய்ய........!
நீங்கள் பேஸ்புக்கில் இருக்கும் போது, மேலே உள்ள URL address (கணிணித் திரையின் மேலே உள்ள பகுதியில்) "https:" என்பதற்குப் பதிலாக "http:" என்று இருந்தால், உங்கள் பேஸ்புக் அமைப்பு (settings) பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகிறது.
இது உங்கள் பேஸ்புக் அமைப்பை 'ஹாக்' (Hack) செய்வதற்கு இலகுவாகிவிடும்.
எனவே உடனடியாக உங்கள் 'கணக்கு' (Account) இற்குச் சென்று, அங்கு 'கணக்கு அமைப்புகள்' (Account Settings) என்பதைத் தெரிவுசெய்து, பின்னர் 'கணக்கு பாதுகாப்பு' (Account Security) என்பதில், 'மாற்று' (Change) என்பதைத் தெரிவு செய்து, அங்கே "secure browsing" என்பதையும், "Send me an email" என்பதையும் தேர்வு செய்து பின்னர் சேமிக்கவும்.
இதன் பின்னர் உங்கள் பேஸ்புக் கணக்கில் வேறு யாராவது, வேறு ஒரு கணிணியின் மூலம் உள்நுழைந்தாலும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் உடன் அறிவித்தல் கொடுக்கும்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணிணிகள் பாவிப்பவராக இருந்தால், அவற்றிற்கான பெயர்களை இடும்படியும், பேஸ்புக் கேட்டுக் கொள்ளும். அதைக் கொடுப்பதன் முலம் நீங்கள் பல கணிணிகளில் பேஸ்புக்கைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: பேஸ்புக்கைத் தமிழிலும் பலர் பாவிப்பதால், இரண்டு மொழிகளிலும் மாற்றங்கள் பற்றிய விபரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
0 Comments