மக்களின் நன்நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Toshiba நிறுவனம் தனது தயாரிப்பில் உருவான AT300SE எனும் Tablet - இனை அறிமுகப்படுத்துகின்றது.
Android 4.1 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ள இவை 10.1 அங்குல அளவுடைய LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
மேலும் NVIDIA Tegra 3 Processor - இனை உள்ளடக்கியுள்ளதுடன், பிரதான நினைவகமாக 1GB RAM - இனைக் கொண்டுள்ளதுடன் துணை நினைவாகமாக 16GB - இனையும் கொண்டுள்ளது.
எனினும் தேவைக்கு ஏற்றவாறு microSD கார்ட் மூலமாக துணை நினைவகத்தினை 64GB வரை அதிகரிக்க முடியும்.
இவற்றுடன் 3 Mexapixels உடைய பிரதான கமெரா, மற்றும் 1.2 Mexapixels உடைய துணைக் கமெரா போன்றவற்றினையும் கொண்டுள்ள இதன் பெறுமதியானது 300 யூரோக்கள் ஆகும்.

.jpg)



0 Comments