Acer அறிமுகப்படு​த்தும் Liquid Z110 Duo கைப்பேசிகள்


Acer நிறுவனமானது Android 2.3.3 Gingerbread இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Acer Liquid Z110 Duo எனும் கைப்பேசியினை எதிர்வரும் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
Dual Sim வசதி கொண்ட இக்கைப்பேசியானது 3.5 அங்கு அளவுடையதும், 640 x 480 Pixels Resolution உடையதுமான தொடுதிரையைக் கொண்டுள்ளது. மேலும் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய MKT 6575 Processor-னையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் முதன்மை நினைவகமாக 512MB RAM - இனையும், துணைநினவகமாக 512MB கைப்பேசியுடன் கொண்டுள்ளதோடு மேலதிக நினைவகமாக 4GB நினைவகமாக microSD card இனையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 3 Mexapixels உடைய கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன் WiFi மற்றும் Bluetooth வசதியினையும் கொண்டுள்ளன. இவற்றின் பெறுமதியானது 99 யூரோக்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments