மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Xbox Music சேவை இன்றைய தினம் அறிமுகமாக உள்ளது.
Windows சாதனங்கள், Smart Phone மற்றும் Tabletகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் சுமார் 30 மில்லியன் வரையிலான பாடல்களை கேட்டு மகிழ முடியும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சேவையினை Windows 8 இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களில் முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடிவதுடன், ஏனையவர்களுக்கு இதில் குறிப்பிட்ட அளவான சேவைகளை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது.
எனினும் மாதாந்தம் 9.99 அமெரிக்க டொலர்களை செலுத்தி ஏனையவர்களும் இச்சேவையினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments