Toshiba அறிமுகப்படு​த்தும் முதல் Hybrid Driveகள்


கணனிகள் உட்பட அதிகளவான இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Toshiba நிறுவனம் Notebook கணனிகளுக்காக தனது தயாரிப்பல் உருவான Hybrid Driveகளினை அறிமுகப்படுத்துகின்றது.
Hybrid Drive என்பது இருவேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ள வன்றட்டு ஆகும்.
இவை 1TB மற்றும் 750GB ஆகிய அளவுகளைக்கொண்ட சாதாரண வன்றட்டுக்களுடன் 8GB அளவு கொண்ட NAND Flash Memoryயினையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டவையாகும்.
இந்த Hybrid Drive கள் சாதாரண வன்றட்டுக்களை விடவும் Read, Write வேகங்கள் உயர்வாக கொண்டுள்ளன. இதனால் கணனியின் ஒட்டுமொத்தமான செயற்பாட்டு வேகமும் அதிகரிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments