ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும்வகையில் கைப்பேசி உற்பத்தியில் துரித வளர்ச்சி கண்டுவரும் Samsung நிறுவனமானது தனது புதிய வரவாக Galaxy S III Mini கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
Android 4.1 Gelly Bean இயங்குதளத்தில் செயற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 800 x 480 Pixels Resolution கொண்டதும், 4 அங்குல அளவுடையதுமான WVGA Super AMOLED தொழில்நுட்பத்தினைக்கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 1GHz வேகத்தில் செயலாற்றும் வல்லமை கொண்ட Processor-னை உள்ளடக்கியுள்ளதுடன் 5 Mexa pixels உடைய கமெரா மற்றும் 8GB மற்றும் 16GB அளவுடைய உள்ளக மெமரியினைக் கொண்டுள்ளதுடன் microSD கார்ட் மூலம் 32GB வரை மெரியினை அதிகரிக்க முடியும்.
இதன் பெறுமதியானது 295 யூரோக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)


0 Comments