மக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் Tabletகளில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.
இதன் அடிப்படையில் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Multimedia Projectorகளை கொண்ட புதிய Tabletகள் அறிமுகமாகின்றன.
SmartQ U7 எனும் பெயருடன் அறிமுகமாகும் இவை 1024 x 600 Pixels உடையதும் 7 அங்குல அளவுயதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1 GHz வேகத்தில் செயற்படக்கூடிய OMAP 4430 Processorகளையும் கொண்டுள்ளன.
அத்துடன் இவற்றின் Projector மூலம் 50 அங்குலங்கள் உருப்பெருக்கம் கொண்ட காட்சிகளை உருவாக்க முடியும்.
8GB மற்றும் 16GB உள்ளக சேமிப்பு சாதனங்களைக் கொண்டதாகக் கிடைக்கும் இவற்றின் பெறுமதியானது முறையே 315 அமெரிக்க டொலர்கள், 400 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தேவைக்கு ஏற்றவாறு சேமிப்பு அளவினை microSD கார்ட்கள் மூலம் அதிகரிக்கவும் முடியும்.

.jpg)


0 Comments