அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் முதலாமாண்டு நினைவு தினம்


அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்து நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
கணைய புற்றுநோயால் சில காலம் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய 56வது வயதில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் கடந்த 1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஸ்டீவன் பவுல் ஜாப்ஸ் பிறந்தார்.
கணனி பொறியியலாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார்.
அப்பிள் கணனியைக் கண்டுபிடித்து கணனி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
கணனி மட்டுமல்லாது அப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.
கடந்த 1977ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனத்தின் சார்பில் கணனியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27ஆம் ஆண்டு முதன் முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.
பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரது உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவருடைய நினைவுநாளில் ஜாப்ஸின் கண்டுபிடிப்புகளை பற்றி நினைவு கூர்ந்தார் ஜான் அபெல். அவர் கூறுகையில், அப்பிள் நிறுவனத்தை தொடங்கி வியக்கத்தக்க வகையிலான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துச் சென்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றார்.

Post a Comment

0 Comments