கடல் கடந்து நிலத்திற்க்கு வரும் புயலுக்கு பெயர் - நிலம்



வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை, இந்தியாவை அது தாக்கினால் அதற்கு´நிலம்´ எனப் பெயரிடுவது என பிராந்திய நாடுகள் தீர்மானித்துள்ளன. 

இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்போது ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து அவற்றுக்கான பெயர்களைச் சூட்டி வருகின்றன. 
இந்த நிலையில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள்,இலங்கை, பாகிஸ்தான்,தாய்லாந்து,மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. 
ஏற்கனவே பிரேரிக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்கள் அனர்த்தம் இடம்பெறும்போது ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன. 
கடைசியாக முர்ஜான் என்ற புயல் இப்பிரதேசத்தைத் தாக்கியது. இந்தப் பெயரை வைத்த நாடு ஓமன். இந்தப் புயல் அரபிக் கடலில் உருவாகி சோமாலியா பகுதியில் கரையைக் கடந்தது. 
தற்போது வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது புயலாக மாறினால் அந்தப் புயலுக்கு நிலம் என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை சூட்டிய நாடு பாகிஸ்தான். 
அடுத்த புயல் வரும்போது அதற்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை சூட்டிய நாடு இலங்கை.



Post a Comment

0 Comments