கூகுளில் எச்சரிக்கை செய்தியை உருவாக்குவ​தற்கு



பொதுவாக பையர் பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய உலாவிகளில், ஒரே நேரத்தில் பல டேப்களை(tab) ஓப்பன் செய்த பின் தவறுதலாக அவற்றினை மூடும்போது(close) எச்சரிக்கைச் செய்தி ஒன்று தோன்றும்.

எனினும் அதிகளவான பயனர்களினால் பயன்படுத்தப்படும் உலாவிகளில் ஒன்றான கூகுளின், குரோம் உலாவியில் இவ்வாறான வசதி கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தவறுதலாக அனைத்து டேப்களையும் ஒரே நேரத்தில் மூடிவிடும் அபாயம் காணப்படுகின்றது.

ஆனால் தற்போது இப்பிரச்சினைக்கான தீர்வாக குரோம் உலாவிகளில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய நீட்சி ஒன்று காணப்படுகின்றது. இதனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் குறித்த எச்சரிக்கை செய்தியை உருவாக்கி தேவைக்கு ஏற்றவாறு டேப்களை மூடிவிடும் வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.




Post a Comment

0 Comments